i-manager's Ponni Nadhi: Journal on Tamil Language & Literature (JPON)


Volume 2 Issue 2 July - December 2025

கட்டுரைகள்

புறநானூற்றில் ஆற்றுப்படுத்தல்
Āttuppaṭuttal in Purananuru

முனைவர் சே. பிருந்தா*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைசிவபுரி.
பிருந்தா, சே. (2025). புறநானூற்றில் ஆற்றுப்படுத்தல். பொன்னி நதி, 2(2), 1-5.

Abstract

தமிழ் இலக்கிய வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் சமூகத்தின் அடையாளத்தைச் சுமந்து நிற்கும் நூல் புறநானூறாகும். தமிழர் வாழ்வின் வரலாறு மற்றும் வீரத்தை விளக்கும் இலக்கியம். ஈகையும் கொடையும் இரு கண்களென வாழ்ந்த ஈர மனமுடைய தமிழர்களின் இரவாப் புகழ் பேசும் எழுத்து ஓவியம் புறநானூறு. புறநானூற்றுப் புலவர்கள், மன்னர்கள் குறுநில மன்னர்கள் வேளிர்கள் போன்றவர்களின் ஈகையையும் கொடையையும் பாடியதோடு மட்டுமல்லாமல் பாணர்கள் புலவர்கள் விறலியர் போன்றவர்களை ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படைப் பாடல்களையும் படைத்துள்ளனர். ஆற்றுப்படைப் பாடல்களில் மன்னர்களின் நாட்டு வளம், அவர்களின் ஈகைப் பண்பு, பாணர், புலவர், விறலியரின் வறுமை நிலை போன்றவற்றைப் பாடி அவர்களை ஆற்றுப்படுத்திய திறத்தை விளக்குவதே இவாய்வின் நோக்கமாகும்.

In the history of Tamil literature, the work that bears the identity of Tamil society from over two thousand years ago is Purananuru. It is a literary text that vividly portrays the history and heroism of the Tamil people. Purananuru stands as a literary painting that speaks of the undying fame of the generous-hearted Tamils, who regarded charity and munificence as their two eyes in life. The poets of Purananuru not only praised the generosity and liberality of kings, chieftains, and Velir rulers, but also composed Āttuppaṭai poems that offered guidance and encouragement to bards, poets, and viraliyar (female performers). These Āttuppaṭai poems describe the prosperity of the kings’ realms, their charitable virtues, and the impoverished condition of bards, poets, and performers, while directing them toward generous patrons. The objective of this study is to examine and explain the poetic skill with which such encouragement is articulated in the Āttuppaṭai poems of Purananuru.

கட்டுரைகள்

திருமுறைகளில் அறம்
Virtue in the Thirumurais

கவியருவி ச. குமரவேல்*
தமிழ் ஆர்வலர், ஓசூர் – 635 109.
குமரவேல், ச. (2025). திருமுறைகளில் அறம். பொன்னி நதி, 2(2), 6-11.

Abstract

முன்னுரை – இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், இந்து தத்துவம் ஒரு வாழ்க்கை முறை, இல்லறம் அக-புறத்திணையை அடிப்படையாகக் கொண்டது. வாழ்வியல் கோட்பாடு. பன்னிரு திருமுறைகளின் ஒற்றுமை – பிரணவ மந்திரத்தின் சிறப்பை விளக்குவது. அறம் கூறும் திருமுறைகள் – தேனினும் இனிய தத்துவங்கள், தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஐந்நில மக்களுக்கு அக-புற வாழ்வியலை புகட்டுகின்றன. தோத்திரம் – ஆன்மிக நாட்டம் அன்பையும் அமைதியையும் உருவாக்கும். வாழ்வியல் அறம் – இல்லற அறம் கற்புநெறியை மையப்படுத்தியது. சைவம் காட்டும் அறநெறி – அடியாரின் பெருந்தன்மை. வழிகாட்டி, சாத்திரம் – திருமந்திரத்தின் நாதம் சிவம் – அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. சைவ நாற்பாதங்கள் – மெய்ஞ்ஞானம். பிரபந்தம் – ஆனந்தத் தாண்டவ சிவனின் திருவடி பிறவாதிருக்கும் வரம் தரும். வரலாறு, புராணம் – நாயன் மார்களின் வாழ்வியல் வெளிச்சம். விருந்தோம்பல் – விருந்தோம்பலின் உன்னதம். திருநீலகண்டர் புராணம் – கற்பின் வெளிப்பாடு,. பெரிய புராணம் – நீதிநெறி. உடலின் ஐந்து கலசம். முடிவுரை – எண்சுவை.

Introduction - The basic of literature in grammar, Hinduism as a way of life, domestic life is based on inner (akam) and outer (puram) divisions. The life principle is that the unity of the twelve Thirumurais explains the greatness of the Pranava mantra. The Thirumurais that speak of virtue are philosophies sweeter than honey; all Tamil literature teaches inner and outer life to people of the five lands. Prayer - Spiritual interest will create love and peace. Way of life virtue - domestic virtue. Centered on chastity. The path of virtue shown by Shaivism - the greatness of the devotee, the guiding scripture, the sound of Thirumandiram is Shiva - Love is Shiva. The four paths of Shaivism - true knowledge. Prabhandam - The holy feet of Shiva performing the dance of bliss grants the boon of no rebirth. History, Puranas, the light of the Nayanmars' lives. Hospitality - the greatness of hospitality. Thiruneelakandar Purana is an expression of chastity. Periya Purana - Code of justice, the five vessels of the body up to the head - eight tastes.

கட்டுரைகள்

திருப்பாவையில் குறிப்பு முரண்
Note Contradiction in Thiruppavai

திரு. மா. சிவஞானம்*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
சிவஞானம், மா. (2025). திருப்பாவையில் குறிப்பு முரண். பொன்னி நதி, 2(2), 12-14.

Abstract

திருமாலை முழுமுதற் கடவுளாக வைணவர்கள் வழிபட்டனர். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண்ணாகத் தோன்றியவள். சைவத்தில் தோன்றிய காரைக்கால் அம்மையாருக்கு இணையாக வைணவத்தில் போற்றப் பெற்றவள். கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் பொருட்டு தன்னுடைய ஏக்கத்தையும், ஆசையையும் வெளிப்படுத்தும் விதமாக நாச்சியார் திருமொழியில் பதிவு செய்துள்ளார். மற்றொரு நூலான திருப்பாவையில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பு பற்றிப் பாடியுள்ளார். அந்த வகையில் திருப்பாவையில் ஆண்டாள் கையாண்டுள்ள குறிப்பு முரணை இனங்காணுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

Vaishnavites worshipped Thirumal as the supreme deity. Among the twelve Vaishnava Alvars, only Andal was born as a woman. In Vaishnavism, she is revered as an equal to Karaikkal Ammaiyar, who appeared in Shaivism. In Nachiyar Thirumozhi, she has recorded her longing and desire to attain Kannan as her hero. In another book, Thiruppavai, she has sung about the Pavai fast undertaken by virgins during the month of Margazhi. In that way, this research article aims to identify the note contradiction used by Andal in Thiruppavai.

ஆய்வுக் கட்டுரைகள்

அக்கினிக் குஞ்சு
Agnikunj (Fire Spark)

மு. ராமலட்சுமி*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஆறுமுகம் பழனிகுரு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சத்திரப்பட்டி -626102.
ராமலட்சுமி, மு. (2025). அக்கினிக் குஞ்சு. பொன்னி நதி, 2(2), 15-18.

Abstract

சுப்பிரமணிய பாரதியார் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்கள் எழுச்சி பெரும் வகையில் பல பாடல்களை பாடியவர் இவரின் கவிதைகள் மிகச் சிறப்பாகவும் எளிமையான நடையிலும் எழுதப்பட்டது. மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது. மேலும் நாட்டுப்புற பாடல் அமைப்பில் உள்ள நொண்டி சிந்து என்னும் நடையினை பாடல்களில் பயன்படுத்தி உள்ளார். பெண்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடியவர் பாரதியார். மக்கள் மனதிலும் சுதந்திரப் போராட்டத் தீயை வளர்த்தவர். தமிழ் மொழிக்காய் தன் இன்னுயிரையும் தரத் தயாரானவர். சாதிக் கொடுமையை எதிர்த்த சாதனையாளர். புரட்சித்தீயை ஊட்டிய புதுமையாளர்.

Subramania Bharati was a freedom fighter who sang many songs to inspire public uprising during the Indian independence movement. His poems were written in a very excellent and simple style, in a way that everyone could understand. He also used the "Nondi Chindu" style, which is in the structure of folk songs, in his songs. Bharati was a fighter for women's rights and freedom. He nurtured the fire of the freedom struggle in people's hearts. He was ready to give his life for the Tamil language. A high achiever who opposed caste oppression, a model who fueled the revolutionary fire.

ஆய்வுக் கட்டுரைகள்

மாற்றுத்திறனிய நோக்கில் மு. வ. வின் கரித்துண்டு நாவல்
M. Varadarajan's Novel "Karisithundu" from the Perspective of Disability Studies

ரா. தினேஷ்* , முனைவர் வெ. இரமேஷ்குமார்**
* முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610005.
** நெறியாளர் மற்றும் உதவி பேராசிரியர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610005.
தினேஷ், ரா., மற்றும் இரமேஷ்குமார், வெ. (2025). மாற்றுத்திறனிய நோக்கில் மு. வ. வின் கரித்துண்டு நாவல். பொன்னி நதி, 2(2), 19-23.

Abstract

சங்க காலம் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியம் ஒவ்வொரு வகையான சமூகத்தையும் அதன் மக்களையும் பதிவு செய்து வருகிறது. அதே சமயம் நவீன இலக்கியம் தொடங்கிய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் கலை, இலக்கியம், பண்பாடு போன்றவற்றையும் தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளது. அப்படியாக ஒரு குறிப்பிட்டச் சமூகம் அல்லது சிறு குழு என்று அழைக்கக்கூடிய மாற்றுத்திறனாளர்களைப் பற்றி தமிழ் இலக்கியம் மிக விரிவாகப் பேசவில்லை என்றாலும், ஆங்காங்கே இவர்களின் வாழ்வு மற்றும் உளவியல் சிக்கல்கள் பற்றிப் பதிவு செய்துள்ளது. அத்தகைய ஒரு பதிவாக மு. வரதராசன் எழுதிய கரித்துண்டு என்னும் நாவல் மாற்றுத்திறனாளர் ஒருவனைப் பற்றியதாகும். கால்களை இழந்த ஒரு ஓவியர் சாலை ஓரங்களில் படம் வரைந்து தன் வாழ்வை நடத்தி வருகிறார். அவரைக் கண்ட கதாசிரியர் என்னும் கதை சொல்லி அவரை பின்தொடர்ந்து அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் அவர் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையும் அந்த சமூகம் இவர் மீது கொண்ட அக்கறையும் இந்நாவலில் விரிவாக பேசவில்லை என்றாலும், சிறு சிறு இடங்களில் தொட்டுக்காட்டி சென்ருக்கிறது, அதில் சிறு பகுதிகளை முதன்மையாக வைத்து மாற்றுத்திறனிய நோக்கில் மு வ வின் கரித்துண்டு நாவல் என்கிற நோக்கில் ஆராயப்படுகிறது. குடும்பத்திலும் சமூகத்திலும் மற்றும் தனிப்பட்ட வாழ்விலும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பற்றி இந்நாவல் பேசுகிறது.

From the Sangam age, literature in each period has recorded a particular type of society and its people. At the same time, in the period when modern literature began, Tamil literature has recorded people's life events, art, literature, culture, and so on. As such, Tamil literature has not spoken extensively about a specific community or a small group called the disabled. However, it has recorded their lives and psychological problems here and there. As one such record, the novel "Karisithundu" written by M. Varadarajan is about a disabled person. A painter who has lost his legs lives his life by drawing pictures on the roadside. The author, who is the narrator, follows him and the events that happened in his life, his concern for society, and the society's concern for him are not discussed in detail in this novel, but are indicated in small places. This study primarily focuses on those small parts to examine M. Varadarajan's novel "Karisithundu" from the perspective of disability studies. This novel talks about the problems faced by every disabled person in the family, society, and personal life, and their solutions.

ஆய்வுக் கட்டுரைகள்

நாவல்களில் பாத்திரப் படைப்பு – ஓர் பார்வை
Character Creation in Novels - A View

முனைவர் பி. ஜோதி*
உதவி பேராசிரியர் மற்றும் தமிழ் துறை தலைவர், செயினட் ஜோசப் கலை அறிவியல் மகளிர் கல்லூரி சிங்கம்புணரி.
ஜோதி, பி. (2025). நாவல்களில் பாத்திரப் படைப்பு – ஓர் பார்வை. பொன்னி நதி, 2(2), 24-26.

Abstract

நாவல் என்பது மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் கலைநயத்துடன் வெளிப்படுத்தும் இலக்கிய வடிவமாகும். இதில் பாத்திரங்கள், படைப்பின் உயிராக விளங்குகின்றன. ஒரு நாவலின் கதை, அதன் பாத்திரங்களின் செயல்பாடுகள், சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் வளர்ச்சியின் மூலம் முன்னேறுகிறது. இக்கட்டுரை, தமிழ்நாவல்களில் பாத்திரப் படைப்பின் விதிமுறைகள், உளவியல் ஆழம், சமூகப் பின்னணி மற்றும் சின்னங்களின் பயன்பாடு ஆகியவற்றை ஆராய்கிறது. பாரம்பரியமும் நவீனமும் இணையும் பாத்திர வடிவாக்கங்கள், எழுத்தாளரின் கலைப்பார்வையையும் காலப்பின்னணியையும் பிரதிபலிக்கின்றன. வாசகர்களின் உணர்ச்சியைத் தூண்டி சிந்தனையை விரிவாக்கும் பாத்திரப் படைப்பின் சிறப்புகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறது.

A novel is a literary form that artistically expresses the many dimensions of human life and various aspects of society. In this, characters serve as the life of the creation. The story of a novel progresses through the actions, thoughts, feelings, and development of its characters. This article examines the rules of character creation, psychological depth, social background, and the use of symbols in Tamil novels. Character formations that combine tradition and modernity also reflect the artistic vision of the writer. This study extensively analyzes the special features of character creation that provoke readers' emotions and expand their thoughts, based on some selected novels.

ஆய்வுக் கட்டுரைகள்

நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடியினரின் இனவரலாறு
The Ethnic History of the Mullukurumbar Tribal People of the Nilgiris District

பா. செல்வகுமரன்* , முனைவர். கா. உமாராஜ் **
* முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21, தமிழ்நாடு.
** இணைப்பேராசியர் மற்றும் துறைத்தலைவர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21, தமிழ்நாடு.
செல்வகுமரன், பா., மற்றும் உமாராஜ், கா. (2025). நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடியினரின் இனவரலாறு. பொன்னி நதி, 2(2), 27-33.

Abstract

தென்னிந்தியப் பகுதிகளாகிய தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் குறும்பர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடலூர், கோத்தகிரி வட்டங்களிலும் பந்தலூர் வட்டத்தின் மேற்குப் பகுதியிலும் கேரள மாநிலத்தில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வயநாடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலும் குறும்பர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் எண்ணற்ற பழங்குடிகள் தற்காலத்திற்கேற்ற நாகரிக வளர்ச்சியின்றி மலைகளிலும், காடுகளிலும், காடுகளை ஒட்டிய மலையடிவாரப் பகுதிகளிலும் தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ”குறும்பாஸ்” என்று அழைக்கப்படும் குறும்பர்களுக்குள் பல இனக்குழுக்கள் இருப்பினும் ஆலுக்குறும்பர், பெட்டக்குறும்பர் மற்றும் முள்ளுக்குறும்பர் என மூன்று இனத்தினராக வகைப்படுத்தப்படுகின்றனர். பெயரளவில் ஓரினத்தராக அறியப்படும் இவர்கள் தங்களுக்குள் எவ்வித சமூகத் தொடர்பும், சமுதாய பழக்க வழக்கங்களும் இன்றித்தனித்து வாழ்ந்து வருகின்றனர். பண்டையப் பழங்குடியினர்களில் ஒருவரான குறும்பர்களின் கலாச்சாரம், பண்பாடு, சமூகம், வாழ்க்கை முறைகள் மற்ற பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. 2011 -ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இவ்வினமக்களின் எண்ணிக்கை 6552 ஆகும். சமூகப் பொருளாதார அடிப்படையில் முழுமையான வளர்ச்சியடையாத இம்மக்களின் வாழ்க்கை முறைகள் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகின்றது. முள்ளுக்குறும்பர் பழங்குடி மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மொழிச்சூழல் ஆகியவற்றைப்பற்றி தெளிவாக விவரிப்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

Kurumbars live in three states including South Indian regions like Tamil Nadu, Kerala, and Karnataka. In Tamil Nadu, Kurumbars live in the Gudalur and Kotagiri circles in the Nilgiris district, the Maengap region of the Bandalur circle, and the eastern part of the Wayanad district bordering Tamil Nadu in Kerala state. Among them, countless tribals live without modern development in the hills, forests, and foothills bordering the forests, establishing their residences. Although there are many ethnic groups among the Kurumbars called "Kurumbas", they are classified into three ethnic groups: Aalukurumbar, Bettakurumbars, and Mullukurumbar. Known as one race by name, they live separately without any social contact or community customs among themselves. Compared to other tribals, the culture, civilization, society, and lifestyles of the Kurumbars, who are one of the ancient tribals, are completely different. Based on the 2011 census, the population of this community is 6552. The lifestyles of these people, who are backward and undeveloped in terms of socio-economic status, are conducive to unity and development. The main objective of this article is to clearly explain the culture, civilization, and language group of the Mullukurumbar tribal people.

ஒப்பீட்டு கட்டுரைகள்

மொழிபெயர்ப்புக் கலை ஓர் அரிய கலை
Translation as a Rare Art

முனைவர் ம. பாபு*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
பாபு, ம. (2025). மொழிபெயர்ப்புக் கலை ஓர் அரிய கலை. பொன்னி நதி, 2(2), 34-38.

Abstract

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உரையின் அசல் பொருள், நோக்கம், மற்றும் தொனியைத் தக்கவைத்து மொழிபெயர்ப்பதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இது மொழிபெயர்ப்பியல் துறையின் ஒரு பகுதியாகும். இது மொழிபெயர்ப்பு முறைகள், கலைச்சொல்லாக்கங்கள், சவால்கள் மற்றும் இலக்கணம், மரபு, கலைச்சொற்கள் மற்றும் பிற மொழிப் பயன்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்கிறது.

Translation is the art and science of translating from one language to another while retaining the original meaning, intent, and tone of the text. It is part of the field of translation studies, which studies various aspects such as translation methods, terminology, challenges, and grammar, technical terms, and other language uses.

ஒப்பீட்டு கட்டுரைகள்

அகநானூற்றுப் பாடல்களில் தொல்காப்பிய வண்ணங்கள்
Shades of Tolkāppiyam in Akanaṉūṟu songs

இரா. கார்த்திகேயன்* , முனைவர் வெ. இரமேஷ்குமார்**
* முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம், திருவாரூர்.
** உதவிப் பேராசிரியர், நெறியாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம், திருவாரூர்.
கார்த்திகேயன், இரா., மற்றும் இரமேஷ்குமார், வெ. (2025). அகநானூற்றுப் பாடல்களில் தொல்காப்பிய வண்ணங்கள். பொன்னி நதி, 2(2), 39-45.

Abstract

தமிழ் இலக்கண மரபானது தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரமாக கூறப்பட்டாலும், பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாக யாப்பிலக்கணம் கவிதை உருவாக்குவதற்கான இலக்கணத்தைப் பேசுவதாக அமைகிறது. தொல்காப்பியர் கவிதை இயற்றுவதற்கான செய்யுள் உறுப்புகளாக 34 உறுப்புகளை தொல்காப்பிய செய்யுளியலில் கூறுகிறார். 34 உறுப்புகளில் முதல் இருபத்தாறு உறுப்புகளை தனிநிலைச் செய்யுளுக்குரியதாகவும் அடுத்த எட்டு உறுப்புகளைத் தொடர்நிலைச் செய்யுளுக்கு உரியதாகவும் கூறுகின்றார். தனிநிலைச் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாக வண்ணம் அமைகின்றது. தொல்காப்பியர் வண்ணத்தின் வகைகளை பாஅ வண்ணம் தொடங்கி முடுகு வண்ணம் ஈறாக இருபது வகைகளாக வகைப்படுத்துகின்றார். பழந்தமிழ் இலக்கியங்களில் மக்களின் அகவாழ்வினை சித்தரிக்கின்ற நூல்களுள் ஒன்றாக அகநானூறு விளங்குகிறது. சங்க இலக்கியத்தில் அகத்திணைப் பற்றி சிறப்பாக பேசக்கூடிய அகநானூற்றுப் பாடல்களில் தொல்காப்பியரின் இலக்கண நிலைப்பட்ட வண்ணங்களை ஆராயும் முகமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

Although the Tamil grammar tradition is mentioned in Tolkāppiyam as three chapters: Eḻuttu (orthography/phonology), Chol (morphology/syntax), and Poruḷ (semantics/poetics), as a part of Poruḷ grammar, the chapter on prosody (Yāppu) discusses the grammar for creating poetry. Tolkāppiyar mentions 34 components as poetic elements for composing poetry in the Tolkāppiyam Ceyyuḷiyal (chapter on poetics). He states that the first twenty-six components belong to the independent poem (taṉinilaic ceyyuḷ) and the next eight components belong to the continuous poem (toṭarnilaic ceyyuḷ). Among the independent poem components, vaṇṇam (colour/tone) is one. Tolkāppiyar classifies the types of vaṇṇam into twenty types, starting from pā'a vaṇṇam to muṭuku vaṇṇam. Akanaṉūṟu is one of the books in ancient Tamil literature that depicts the inner life (akavāḻvu) of people. This research article aims to examine the grammatical vaṇṇams of Tolkāppiyar in the Akanaṉūṟu songs, which specifically talk about akatiṇai (inner genres) in Sangam literature.

ஒப்பீட்டு கட்டுரைகள்

குறுந்தொகையில் திணைக்கொள்கைகள்
Principles of Thinai in Kurunthogai

முனைவர் தா. லதா*
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620002.
லதா, தா. (2025). குறுந்தொகையில் திணைக்கொள்கைகள். பொன்னி நதி, 2(2), 46-49.

Abstract

தொல்காப்பியம் சுட்டும் ஐவகை நிலங்கள் திணை கொள்கைக்குள் அடங்கும். திணை என்பதற்கு நிலம், இடம், வீடு, குலம், ஒழுக்கம் பல பொருள்கள் உண்டென்று சென்னை பல்கலைக்கழக தமிழ் பெயர் அகராதி குறிக்கிறது. குறுந்தொகை திணைக் கொள்கையின் அடிப்படையில் நிலத்தையும் பருவத்தையும் வைத்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

The five types of lands indicated by Tholkappiyam fall under the principle of Thinai. The Chennai University Tamil Lexicon notes that 'Thinai' has many meanings such as land, place, house, clan, and discipline. The purpose of this article is to examine Kurunthogai based on the principle of Thinai, using land and season as a basis.