i-manager's Ponni Nadhi: Journal on Tamil Language & Literature (JPON)


Current Issue Vol. 2 Issue 1

Volume 2 Issue 1 January - June 2025

கட்டுரைகள்

சங்கமருவிய காலத்திற் சைவநெறி - சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கு
Saiva Tradition during the Sangam Influenced Era - A Perspective Based on Silappadikaram

தி. ஜொய்சி மினேவா*
முதுகலைமானி (தமிழ்), மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகம், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை.
மினேவா, தி. ஜொ. (2024). சங்கமருவிய காலத்திற் சைவநெறி - சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கு. பொன்னி நதி, 2(1), 1-5.

Abstract

தமிழர் பண்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் செந்தமிழ் இலக்கியங்களுள் சிலப்பதிகாரம் தனிச் சிறப்புடையது. சங்கமருவிய காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் இந்நூலைச் சமண சமயத் துறவியான இளங்கோவடிகள் இயற்றியுள்ளார். தமிழின் முதற் காப்பியமாகவும், முத்தமிழ்க்காப்பியமாகவும் கருதப்படும் இவ்விலக்கியம், தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளையும், கலை மேம்பாட்டினையும், வழிபாட்டு நெறிகளையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த சமய, சமுதாய இலக்கியமாகவும் அமைகின்றது. இத்தமிழ்ப் பண்பாட்டு இலக்கியத்தில் சமண சமயக் கருத்துக்கள் மட்டுமன்றி இந்துசமய நெறிகள் பற்றிய அரிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. சமய சமரசத்துடனும் சமயப் பொதுநோக்குடனும் விளங்கும் இத்தமிழ்க் காப்பியத்தில் இடம்பெறும் சிவநெறியாகிய சைவநெறி தொடர்பான விடயங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

Among the corpus of classical Tamil literature that articulates the cultural ideologies of the Tamil people, Silappadikaram occupies a position of singular distinction. This literary work, considered to have emerged during the Sangam influenced era, was authored by Ilango Adigal, an ascetic associated with Jainism. Recognized as the earliest Tamil epic and as a comprehensive embodiment of “Muththamizh” (encompassing prose, music, and drama), this work serves as a distinguished religious and sociocultural text that illuminates the lived practices, artistic developments, and ritual traditions of the Tamil people. This Tamil cultural literary work includes not only Jain religious ideas but also rare references to Hindu ritual practices. This article aims to study aspects related to Saiva philosophy, which is prominently featured in this Tamil epic that reflects both religious harmony and a universal religious outlook.

ஒப்பீட்டு கட்டுரைகள்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பிழை பகுப்பாய்வு: எழுத்தும், எழுத்துப் பிழைக்கான காரணங்கள்
Error analysis of twelfth grade students: Writing, Causes of spelling error

வி. செல்வகுமார்* , கா. உமாராஜ் **
* முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. (ORCID: 0009-0009-9406-6572)
** இணைப்பேராசிரியர் & துறைத்தலைவர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
செல்வகுமார், வி., மற்றும் உமாராஜ், கா. (2024). பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பிழை பகுப்பாய்வு: எழுத்தும், எழுத்துப் பிழைக்கான காரணங்கள். பொன்னி நதி, 2(1), 43-46.

Abstract

<p>ஒரு மொழியின் அடிப்படை எழுத்து. எழுத்து என்பது வெறும் வரிவடிவம் மட்டுமல்லாமல், மொழியின் ஒலிப்பு முறைக்கும், பொருள் வேறுபாட்டிற்கும் ஆதாரமாக அமையும் ஒரு நுண்மையான அலகு என்பதை மையப்படுத்தி, அதன் இலக்கணம், பிறப்பு மற்றும் வகைகள் முதலெழுத்து, சார்பெழுத்து ஆகியவற்றைத் தொல்காப்பியம், நன்னூல் போன்ற செவ்வியல் இலக்கண நூல்களின் அடிப்படையில் விளக்குகிறது. மாணவர்களின் எழுத்துத் திறனில் காணப்படும் பிழைகளை, அவற்றின் உள்ளார்ந்த தன்மையைப் பொறுத்து 'தவறுகள்' தற்செயலான விலகல்கள் மற்றும் 'பிழைகள்' முறையான கற்றல் குறைபாடுகள் என நுட்பமாக வேறுபடுத்தி, பிழைப் பகுப்பாய்வின் (Error Analysis) அத்தியாவசிய முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. மேலும், எழுத்துப்பிழைகள் ஏற்படுவதற்கான பன்முகக் காரணிகளை இக்கட்டுரை விளக்குகிறது. மொழியியல் காரணிகளான ஒலிப்புவரிவடிவப் பொருத்தமின்மை, இலக்கண அறிவின்மை, தாய்மொழித் தாக்கம்; அறிவாற்றல் காரணிகளான கவனக்குறைவு, மறதி; கற்பித்தல் சார்ந்த காரணிகளான முறையற்ற பயிற்சி முறைகள், பாடத்திட்டக் குறைபாடுகள்; மற்றும் சமூக-உயிரியல் காரணிகளான சமூகச் சூழல், உடல்நலக் காரணிகள் ஆகியவற்றின் தாக்கத்தை பற்றி ஆராயப்படுகிறது. பிழைப் பகுப்பாய்வு, தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழி கற்றலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ளவும், அவற்றைக் களையவும், மேலும் பயனுள்ள கற்பித்தல் உத்திகள் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்கவும் பெரிதும் உதவுகிறது என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.</p>
<p>The basic of a language is the alphabets used for writing. Writing is not only a taxonomy, but also a subtle unit that is the source of the phonetic system and material difference of the language, and its grammar, birth and types (initials, relatives), based on classic grammatical texts such as Tolkappiyam and Nannool. The errors found in the students' writing ability, depending on their inherent nature, subtly distinguish the essential significance of the Error Analysis, which subtly differentiate the 'mistakes' (accidental deviations) and' errors' (formal learning disorders). Also, this article illustrates the multi -faceted factors for the cause of spelling. Linguistic factors such as phonetic-vigilance, grammatical ignorance, mother tongue impact; Cognitive factors, negligence, obvious; Teaching factors, improper training methods, curriculum disorders; And the impact of social-biological factors, social environment and health factors. This article emphasizes that error analysis helps to understand the challenges faced by students in mother tongue and secondary language learning, eliminate them, and create more effective teaching strategies and curriculum.</p>

கட்டுரைகள்

திருக்குறளில் அறிவியல் பார்வை
Scientific Perspective on Thirukkural

ம. பாபு*
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பி.எஸ்.ஜி. கலை & அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
பாபு, ம. (2024). திருக்குறளில் அறிவியல் பார்வை. பொன்னி நதி, 2(1), 6-9.

Abstract

இன்றைய உலகம் போற்றுதற்குரிய அறிவியல் ஆற்றலால் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை. ஆனால் இஃது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு, அதாவது இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு. திருவள்ளுவரின் காலம், இவற்றிற்கெல்லாம் முற்பட்டகாலம். அக்காலத்தில் அகங்களில் அகல்விளக்கு மட்டுமே ஒளி வீசிய காலம். இக்காலத்திலிருப்பது போல், கடிதங்களோ, எழுதுகோல்களோ, அச்சுக் சுவடிகளாகவும், எழுத்தாணியே எழுதுகோலாகவும் பயன்படுத்தப்பட்ட காலம். இத்துணை தொன்மை வாய்ந்த காலத்தில் படைக்கப்பட்ட நூலில், இன்றளவிலும் பொருத்தமுடைய அறிவியல் சிந்தனைகளைச் சொல்லமுடியுமா, என்றால் முடியும் என்ற முழக்கத்தை ஓங்கி ஒலிக்கச் செய்கின்ற, ஒரே நூல் 'முப்பால்’ என்னும் திருக்குறலாகும்.

Today's world is powered by admirable scientific power. But this was the 21st Century, i.e. the year two thousand and six, Tiruvalluvar's time. At that time, only Agal lamp was used to shine light. There was no pen or paper, only palmyra inscriptions. But though written in such an ancient time, the scientific ideas are still relevant today. The only such book is the Thirukkural called 'Muppal'.

கட்டுரைகள்

பச்சைமலை மலையாளியின பழங்குடி மக்களின் சமூக அமைப்பு மற்றும் சட்டத் திட்டங்கள்
Social structure and legal schemes of the Pachaimalai Malayali tribal people

ரெ. அன்பழகன்* , ச. திவ்யநாதன் **
* உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, கரூர்.
** உதவிப்பேராசிரியர், ஆங்கிலத்துறை, VSB பொறியியல் கல்லூரி, கரூர்.
அன்பழகன், ரெ., மற்றும் திவ்யநாதன், ச. (2024). பச்சைமலை மலையாளியின பழங்குடி மக்களின் சமூக அமைப்பு மற்றும் சட்டத் திட்டங்கள். பொன்னி நதி, 2(1), 10-16.

Abstract

மலையாளி என்னும் பழங்குடி தமிழ்நாட்டில் மூன்று மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கும் கேரள மாநிலத்தின் மலையாளம் பேசும் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவர்கள் தமிழ்நாட்டில், பச்சைமலை, கொல்லிமலை மற்றும் கல்வராயன்மலை ஆகிய மலைப்பகுதிகளில் தனித்து வாழ்ந்து வருகின்றர். மலையாளி என்னும் சொல் “மலையில் வசிப்பவர்கள்” அல்லது “மலையை ஆள்பவர்கள்” என்னும் பொருள்பட பயன்படுத்தப்படுகின்றது. தமிழ்நாட்டின் பச்சைமலையில் வாழும் மலையாளிப் பழங்குடி மக்களின் சமூக அமைப்பு மற்றும் சட்டத் திட்டங்களை விரிவாக ஆராய்கிறது. பச்சைமலை, கோம்பை நாடு, வண்ணாடு, தென்புற நாடு, ஆத்தி நாடு என நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் பல கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இம்மக்களிடையே தங்கள் முன்னோர்களின் வம்சத்தைக் குறிக்கும் 'குலம்' அல்லது 'வீடு' என்ற தனித்துவமான முறை பின்பற்றப்படுகிறது. ஒரே குலத்திற்குள் திருமண உறவுகள் இல்லை. 'கவுண்டன் குலம்' மற்றும் 'குடியானவன் குலம்' என இருபெரும் குலங்கள் உள்ள நிலையில், கவுண்டன் குலமே உயரியதாகக் கருதப்படுகிறது சமூக அமைப்பில், கிராம அளவில் ஊர்க் கவுண்டன், ஊர் மூப்பன், கங்காணி போன்றோரும், நாட்டு அளவில் நாட்டுக் கவுண்டன் (மந்திரி), மூப்பன், நாட்டு சீவன் (சேவபாடி) போன்றோரும் தலைமைப் பொறுப்புகளை வகிக்கின்றனர். இவர்களது பஞ்சாயத்து முறைகள் கிராம அளவிலும், நாட்டுக் கூட்டங்கள் மூலமாகவும் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கின்றன. குறிப்பாக, விவாகரத்து மற்றும் தகாத உறவுகள் போன்ற பிரச்சனைகளே பஞ்சாயத்துகளில் அதிகம் கையாளப்படுகின்றன. பாரம்பரிய வழிகாட்டுதல்கள் மற்றும் தற்காலச் சூழலுக்கேற்ப வகுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. பெண்களின் தலைமைப் பொறுப்பு வரையறுக்கப்பட்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நவீன நீதிமன்றச் சிக்கல்களால், மரபுவழிப் பஞ்சாயத்துகள் இன்றும் மக்களிடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. எட்ஜர் தர்ட்சன் மற்றும் ரங்காச்சாரி ஆகியோர் இவர்களைப் பற்றி கீழ்க்காணுமாறு கூறுகின்றார். “மலையாளி பழங்குடி, நீலகிரியில் வாழும் தோடர் பழங்குடிகள் போல் ஆதிகாலம் தொட்டு மலையில் வாழும் பழங்குடிகள் அல்ல. இவர்களது மொழி தமிழ். இவர்கள் தமிழ்நாட்டின் சமபகுதியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற பழங்குடிகள் ஆகும்” என்கின்றனர். இக்கட்டுரையானது பச்சைமலை மலையாளியின பழங்குடி மக்களின் சமூக அமைப்புகளையும் அவர்களின் சட்டத் திட்டங்களையும் ஆராய்வதாக அமைகின்றது.

The tribal group known as "Malayali" lives in three hill regions of Tamil Nadu. They have no connection with the Malayalam-speaking people of Kerala. They live in isolation in the hill areas of Pachamalai, Kollimalai, and Kalvarayanmalai in Tamil Nadu. The term “Malayali” is used to mean “those who live in the hills” or “those who rule the hills.” This article extensively explores the social structure and legal systems of the Malayali tribal people living in the Pachamalai hills of Tamil Nadu. Pachamalai is divided into four major regions: Kombai Nadu, Vannadu, Thenpura Nadu, and Aathi Nadu, and each region consists of several villages. Among these people, a unique system called 'kulam' or 'veedu', which indicates their ancestral lineage, is followed. There are no marriage relationships within the same clan. With two major clans, 'Goundan Kulam' and 'Kudiyanavan Kulam', Goundan Kulam is considered superior. In their social structure, at the village level, positions such as Oork Goundan, Oor Moopan, and Kangani exist, while at the regional level, titles like Nattuk Goundan (Minister), Moopan, and Nattu Sevan (Servant) hold leadership responsibilities. Their panchayat systems operate at the village level and also through regional gatherings to resolve social issues. Notably, issues like divorce and illicit relationships are most commonly addressed in these panchayats. Judgments are delivered based on traditional guidance and certain restrictions set in accordance with contemporary circumstances. It is noteworthy that women’s leadership responsibilities are limited. Due to the complexities of the modern judicial system, traditional panchayats still hold great importance among the people. Edgar Thurston and Rangachari state the following about them: "The Malayali tribes are not ancient hill tribes like the Todas who live in the Nilgiris. Their language is Tamil. They are tribal groups who migrated from the plains of Tamil Nadu." This article aims to explore the social structures and legal systems of the Malayali tribal community of Pachamalai.

கட்டுரைகள்

சுந்தரராமசாமியின் காகங்கள் உணர்த்தும் உத்திகள்
The Techniques Conveyed by Sundararamasamy’s Crows

க. ரெங்கலெட்சுமி*
உதவிப்பேராசிரியர், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
ரெங்கலெட்சுமி, க. (2024). சுந்தரராமசாமியின் காகங்கள் உணர்த்தும் உத்திகள். பொன்னி நதி, 2(1), 17-22.

Abstract

சுந்தர ராமசாமி 1950லிருந்து 2000வரை எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு காகங்கள். கதைகளின் பொருள் சார்ந்தும் அவற்றைக் கூறுகிற முறை சார்ந்தும் சுந்தர ராமசாமியிடம் காலப் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கதைகள் பதிவு செய்கின்றன. சு.ரா.வின் சிறுகதைகளில் காணப்படும் பல்வேறு உத்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

“Kaagangal” is a complete collection of short stories written by Sundara Ramaswamy from 1950 to 2000. These stories record changes in the course of time in Sundara Ramasamy, depending on the meaning of the stories and the method of telling them. This article is about the various techniques found in the short stories of Sundara Ramasamy.,

ஆய்வுக் கட்டுரைகள்

பதிற்றுப்பத்துப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாடு
The use of adjectives in Patitruppattu songs

ப. கலைகேசவன்*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்விக்கழகம், கோவை – 21. ORCID: 0009-0009-0360-7936
கலைகேசவன், ப. (2024). பதிற்றுப்பத்துப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாடு. பொன்னி நதி, 2(1), 23-26.

Abstract

செம்மொழி என்னும் சிறப்புடன் விளங்கும் மொழி தமிழாகும். தமிழ் மொழியின் செவ்வியல் தன்மைக்கு ஆதாரமாகமாக விளங்குவன சங்ககால இலக்கியங்களாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால இலக்கியங்களைப் பற்றி முழுமையாக அறிவதற்கு இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் மிகவும் இன்றியமையாததாகும். சங்ககால இலக்கியங்களின் மொழிக்கூறுகள் தனித்தனியாகவே ஆராயப்பட வேண்டியிருக்கிறது. அந்தவகையில் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக விளங்கும் பதிற்றுப்பத்துப் பாடல்களில் உரிச் சொற்களின் பயன்பாட்டைத் தொல்காப்பியத்தின் அடிப்படையில் இக் கட்டுரை ஆராய முற்படுகிறது.

Tamil language is a classical language known for its rich heritage. The classical nature of the Tamil language is primarily supported by the Sangam-era literature. To fully understand the Sangam literature, which dates back over two thousand years, grammatical studies are essential. The linguistic features of Sangam-era literature need to be examined individually. In this context, this article attempts to study the use of case suffixes (uris cholgal) in the Pathitrupathu poems—one of the Ettuthokai (Eight Anthologies) of Sangam literature—based on the principles of Tolkappiyam.

ஆய்வுக் கட்டுரைகள்

நீதி நூல்கள் காட்டும் கல்வி
Neethi Noolgal Kaatum Kalvi

ம. கீதா*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோயம்புத்தூர், தமிழ்நாடு. ORCID: 0000-0001-5310-7774
கீதா, ம. (2024). நீதி நூல்கள் காட்டும் கல்வி. பொன்னி நதி, 2(1), 27-31.

Abstract

மனிதர்களை பிற உயிர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்த்திக் காட்டுவது கல்வியாகும். அதனால் தான் வீரத் துறவி விவேகானந்தர் மனிதர்களிடம் மறைந்து கிடக்கும் அறிவின் வளர்ச்சியே கல்வி என்கிறார். ஒரு மனிதனை வளமுள்ளவனாக மாற்றுவதற்குப் போடுகின்ற மூலதனமே கல்வியாகும். தனி மனிதர்களின் வளர்ச்சியிலும் தேசத்தின் வளர்ச்சியிலும் கல்வியின் பங்கு இன்றியமையாதது. 'நீதி நூல்கள் காட்டும் கல்வி' என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை, கல்வியின் சிறப்பு, அழியாத செல்வம், பிறவிப் பயன் நீத்தல், கல்வியின் பண்பு, தலைசிறந்த கல்வி, கற்றோரை விரும்பும் உலகு, கல்வி கற்றறிந்தார் கடமைகள், கல்வியில் ஆசிரியரின் பங்கு, கற்றல் நெறி, ஞானக்கல்வி ஆகிய துணைத்தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது. கட்டுரையின் நிறைவாக முடிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Education is what distinguishes and elevates humans from other creatures. That is why the heroic saint Vivekananda says that education is the development of the knowledge hidden in humans. Education is the capital that is invested to make a human being prosperous. The role of education is essential in the development of individuals and the development of the nation. The research article titled 'Neethi Noolgal Kaatum Kalvi' has been examined under the sub-topics of introduction, the excellence of education, imperishable wealth, the benefit of birth, the nature of education, excellent education, a world that loves learners, the duties of the educated, the role of the teacher in education, the principle of learning, and the education of wisdom. The conclusion is given at the end of the article.

ஆய்வுக் கட்டுரைகள்

திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சமணர்களின் நிலை
Portrayal of Jains in Thirugnanasambandhar Thevaram

க. சுபலா* , ம. கீதா**
* முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா. (ORCID: 0009-0006-1510-7945)
** ஆய்வு நெறியாளர், உதவிப்பேராசிரியர்(SS), தமிழ்த்துறை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா. (ORCID: 0000-0001-5310-7774)
சுபலா, க., மற்றும் கீதா ம. (2024). திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சமணர்களின் நிலை. பொன்னி நதி, 2(1), 32-36.

Abstract

உலகில் வகுக்கப்பட்டுள்ள சமயங்களுள் முதலானதாகவும் மேன்மையானதாகவும் விளங்குவது சைவ சமயமாகும். இச்சமயத்திற்கு முழுமுதற் கடவுளாக விளங்குபவன் சிவபெருமான். வேதமும் சைவமும் தழைத்து ஓங்கி வளர்வதற்காக திருஞானசம்பந்தப் பெருமான் சீகாழிப் பதியில் அவதரித்தார். தமிழகத்தில் பிற சமயங்களின் ஆதிக்கச் சூழல் அதிகரித்திருந்த நிலையில் திருநெறிய தமிழும் சைவமும் வளரத் திருஞானசம்பந்தர் பல திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டார். நாளும் இன்னிசையாலும் செந்தமிழாலும் பல பதிகங்களை இயற்றினார். திருஞானசம்பந்தரது காலத்தில் பிற சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் நன்கு வேரூன்றியிருந்தன. சமண மற்றும் பௌதத்தின் சமயக் கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாகினர் என்பது வரலாறு. சைவ சமயக் கொள்கையையும், பரம்பொருளான சிவபெருமானின் வழிபாட்டு நெறியையும் திருத்தலங்கள் தோறும் சென்று நாடெங்கும்பாடி சைவ சமயத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு ஆற்றியவர். திருஞானசம்பந்தரது முதல் மூன்று திருமுறைகளில் காணப்படும் சமணர்களின் நிலை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. திருஞானசம்பந்தர் சைவச் சமயத்தைப் பரப்பியது பெரும்புரட்சியாகும். அதற்கான கட்டாயச்சூழலும் அதன் தேவையும் திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. திருஞானசம்பந்தரின் பதிகங்கள் வாயிலாக சமணர்களின் நிலை குறித்து ஆராய்ந்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். 'திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சமணர்களின் நிலை’ என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் முன்னுரை, சைவ சமயம், சமணர்கள், திருஞானசம்பந்தரது 10வது பாடல், முக்திபேறு ஆகிய துணைத்தலைப்புகளின் கீழ் ஆராயப்பட்டுள்ளது. கட்டுரையின் நிறைவாக முடிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Saivism is one of the oldest and most prominent religions in the world, with Lord Shiva being the supreme deity of this faith. Thirugnanasambandha Peruman incarnated in Sirkazhi Pathi to ensure the flourishing and growth of the Vedas and Saivism. During a time when other religions were gaining prominence in Tamil Nadu, Thirugnanasambandha undertook numerous pilgrimages to promote the development of Saivism. He composed many hymns in Tamil to further this cause. At the time of Thirugnanasambandha, religions such as Jainism and Buddhism were well-established in Tamil Nadu. History indicates that the religious principles of Jainism and Buddhism caused suffering among the people. Thirugnanasambandha played an important role in the development of Saivism by traveling to various pilgrimage sites and singing hymns that promoted the principles of Saivism and the worship of Lord Shiva, the Supreme Being, across the country. Various studies are being conducted on the portrayal of Jainism in the first three Tirumurais of Thirugnanasambandar's hymns. Thirugnanasambandar's efforts in propagating Saivism represented a significant religious revolution, as the conditions and needs for such a movement existed during his time. The aim of this article is to study, the Status of the Jains through the writings of Thirugnanasambandar. This article, titled “Portrayal of Jains in Thirugnanasambandhar Thevaram” is divided into sections: Introduction, Saivism, Jainism, Thirugnanasambandar's 10th Verse, and Muktiperu, with a conclusion at the end.

ஒப்பீட்டு கட்டுரைகள்

தொல்லியல் நோக்கில் ஓவியக்கலையும் சிற்பக்கலையும்
Painting and Sculpture in Archaeology

ச. மணிமேகலை*
உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர். ORCID: 0009-0007-4543-0732
மணிமேகலை, ச. (2024). தொல்லியல் நோக்கில் ஓவியக்கலையும் சிற்பக்கலையும். பொன்னி நதி, 2(1), 37-39.

Abstract

நாம் கண்ணில் காணும் பொருள்களைச் சித்தரித்து எழுதும் கலையே ஓவியக்கலையாகும். பண்டைய மனிதன் தான் பார்த்தவற்றையே படமாகக் காட்டினான். பின்பு அறிவு வளர, வளர தன் மனத்தால் பல உருவங்களையும் காட்சிகளையும் முடிவு செய்து அவற்றைப் படங்களாக வரைந்தான். பழைய மக்கள் வாழ்ந்த குகைகளில் சிறு சிறு ஓவியங்கள் இன்றும் காணப்படுகின்றது.

Painting is the art of depicting and writing about the things we see with our eyes. Ancient man depicted what he saw as pictures. Then, as his knowledge grew and grew, he decided on many images and scenes in his mind and drew them as pictures. Small paintings can still be found in the caves where ancient people lived.

ஒப்பீட்டு கட்டுரைகள்

கொல்லாமை கொள்கையில் தண்டபாணி சுவாமிகளும், கந்தசாமி சுவாமிகளும்
Dandapani Swamis and Kandaswamy Swamis in the policy of Non-violence

ஐ. சரண்யா * , சு. சதீஷ்குமார்**
* முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை (அரசு உதவி பெறும் பிரிவு) கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர்.
** முதுநிலை உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (அரசு உதவி பெறும் பிரிவு) கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர்.
சரண்யா, ஐ., மற்றும் சதீஷ்குமார், சு. (2024). கொல்லாமை கொள்கையில் தண்டபாணி சுவாமிகளும், கந்தசாமி சுவாமிகளும். பொன்னி நதி, 2(1), 40-42.

Abstract

உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் அறம் நிறைந்த வாழ்வை வாழ வேண்டும் என்றால் அவர்களிடம் அன்பு நிறைந்த நெஞ்சமும், தீய செயல்களை செய்யும் போது மனதுக்குள் அச்சமும், புலால்உணவை மறுத்தலும், பிறருக்கு துன்பம் செய்யாமல் இருத்தலும், உயிர்களைக் கொல்லாமல் வாழ்தல் போன்ற குணங்கள் மக்களின் உள்ளங்களில் இருக்க வேண்டும் என அறநூல்கள் கூறுகின்றன. இவ்வாறு அறநூல்கள் கூறும் அறம் நிறைந்த வாழ்வை வாழ்ந்த அருளாளர்களான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் கொங்கு நாட்டின் கச்சியப்பர் என்று புகழப்படும் கந்தசாமி சுவாமிகளும் மக்களின் உள்ளங்களில் கொல்லாமை உணர்வை ஏற்படுத்த முருகப் பெருமான் மீது தங்கள் பாடிய மாலை நூல்களில் முருகப்பெருமானிடம் எவ்வாறெல்லாம் தங்களின் மனக்கருத்துக்களை முன்வைத்து வேண்டுகின்றன என்று ஒப்புமை நோக்கில் இவ்வாய்வு கட்டுரைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

If all the people in this world are to live a life of charity, the hearts of the people should have kindness towards other men, the fear of the mind, understanding of the suffering of others, and the refusal of killing of life. Thus, the article is in line with the Kandasamy Swami’s and Dandapani Swami’s, who have been living in the minds of the people with similar virtues.