அகநானூற்றுப் பாடல்களில் தொல்காப்பிய வண்ணங்கள்
Shades of Tolkāppiyam in Akanaṉūṟu songs

இரா. கார்த்திகேயன்*, முனைவர் வெ. இரமேஷ்குமார்**
* முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம், திருவாரூர்.
** உதவிப் பேராசிரியர், நெறியாளர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம், திருவாரூர்.
Periodicity:July - December'2025

Abstract

தமிழ் இலக்கண மரபானது தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரமாக கூறப்பட்டாலும், பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாக யாப்பிலக்கணம் கவிதை உருவாக்குவதற்கான இலக்கணத்தைப் பேசுவதாக அமைகிறது. தொல்காப்பியர் கவிதை இயற்றுவதற்கான செய்யுள் உறுப்புகளாக 34 உறுப்புகளை தொல்காப்பிய செய்யுளியலில் கூறுகிறார். 34 உறுப்புகளில் முதல் இருபத்தாறு உறுப்புகளை தனிநிலைச் செய்யுளுக்குரியதாகவும் அடுத்த எட்டு உறுப்புகளைத் தொடர்நிலைச் செய்யுளுக்கு உரியதாகவும் கூறுகின்றார். தனிநிலைச் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாக வண்ணம் அமைகின்றது. தொல்காப்பியர் வண்ணத்தின் வகைகளை பாஅ வண்ணம் தொடங்கி முடுகு வண்ணம் ஈறாக இருபது வகைகளாக வகைப்படுத்துகின்றார். பழந்தமிழ் இலக்கியங்களில் மக்களின் அகவாழ்வினை சித்தரிக்கின்ற நூல்களுள் ஒன்றாக அகநானூறு விளங்குகிறது. சங்க இலக்கியத்தில் அகத்திணைப் பற்றி சிறப்பாக பேசக்கூடிய அகநானூற்றுப் பாடல்களில் தொல்காப்பியரின் இலக்கண நிலைப்பட்ட வண்ணங்களை ஆராயும் முகமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

Although the Tamil grammar tradition is mentioned in Tolkāppiyam as three chapters: Eḻuttu (orthography/phonology), Chol (morphology/syntax), and Poruḷ (semantics/poetics), as a part of Poruḷ grammar, the chapter on prosody (Yāppu) discusses the grammar for creating poetry. Tolkāppiyar mentions 34 components as poetic elements for composing poetry in the Tolkāppiyam Ceyyuḷiyal (chapter on poetics). He states that the first twenty-six components belong to the independent poem (taṉinilaic ceyyuḷ) and the next eight components belong to the continuous poem (toṭarnilaic ceyyuḷ). Among the independent poem components, vaṇṇam (colour/tone) is one. Tolkāppiyar classifies the types of vaṇṇam into twenty types, starting from pā'a vaṇṇam to muṭuku vaṇṇam. Akanaṉūṟu is one of the books in ancient Tamil literature that depicts the inner life (akavāḻvu) of people. This research article aims to examine the grammatical vaṇṇams of Tolkāppiyar in the Akanaṉūṟu songs, which specifically talk about akatiṇai (inner genres) in Sangam literature.

Keywords

தொல்காப்பியம், வண்ணம், அகநானூறு, யாப்பு.

How to Cite this Article?

கார்த்திகேயன், இரா., மற்றும் இரமேஷ்குமார், வெ. (2025). அகநானூற்றுப் பாடல்களில் தொல்காப்பிய வண்ணங்கள். பொன்னி நதி, 2(2), 39-45.

References

[1]. தொல்காப்பியர், தொல்காப்பியம், செய்யுளியல் உரை வளம், க.வெள்ளைவாரணன்(ப.ஆ), காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு 2007.
[2]. தொல்காப்பியர், தொல்காப்பியம் உரைவளம், செய்யுளியல் தொகுதி (1, 2, 3, 4), ஆ.சிவலிங்கனார்(ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு, 1997, மறுபதிப்பு 2015.
[3]. அமிர்தசாகரனார், யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையுடன், மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை(ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1998.
[4]. வேங்கடசாமி நாட்டார், ந. மு, வேங்கடாசலம்பிள்ளை,ரா, அகநானூறு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18, முதற்பதிப்பு,1944.
[5]. கந்தசாமி,சோ. ந., தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம்- முதல் பகுதி, தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 1989.
[6]. மணிகண்டன், ய., தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம, சென்னை, முதற்பதிப்பு ,2001.

[1]. Tolkappiyar, Tolkappiyam, Seyyuliyal Urai Valam, K. Vellaippillai (Ed.), Kamaraj University, Madurai, First Edition 2007.
[2]. Tolkappiyar, Tolkappiyam Uraivalam, Seyyuliyal Volume (1, 2, 3, 4), A. Sivalinganar (Ed.), International Institute of Tamil Studies, Chennai, First Edition, 1997, Reprint 2015.
[3]. Amirthasagaranar, Yapparungalam with Old Commentary, Me.Vi. Venugopalapillai (Ed.), International Institute of Tamil Studies, Chennai, 1998.
[4]. Vengadasamy Nattar, Na. Mu. Vengadachalapillai, Ra., Akananuru, Saivasiddhanta Publishing House, Chennai-18, First Edition, 1944.
[5]. Kandasamy, So. Na., Tamil Yappiyalin Thotramum Valarchiyum Mutharpagam Muthal Paguthi, Tamil University, Thanjavur, First Edition, 1989.
[6]. Manikandan, Y., Thamizhil Yappilakkana Valarchi, Vizhigal Pathippagam, Chennai, First Edition, 2001.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.