">

பச்சைமலை மலையாளியின பழங்குடி மக்களின் சமூக அமைப்பு மற்றும் சட்டத் திட்டங்கள்
Social structure and legal schemes of the Pachaimalai Malayali tribal people

ரெ. அன்பழகன்*, ச. திவ்யநாதன் **
* உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, கரூர்.
** உதவிப்பேராசிரியர், ஆங்கிலத்துறை, VSB பொறியியல் கல்லூரி, கரூர்.
Periodicity:January - June'2025

Abstract

மலையாளி என்னும் பழங்குடி தமிழ்நாட்டில் மூன்று மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கும் கேரள மாநிலத்தின் மலையாளம் பேசும் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவர்கள் தமிழ்நாட்டில், பச்சைமலை, கொல்லிமலை மற்றும் கல்வராயன்மலை ஆகிய மலைப்பகுதிகளில் தனித்து வாழ்ந்து வருகின்றர். மலையாளி என்னும் சொல் “மலையில் வசிப்பவர்கள்” அல்லது “மலையை ஆள்பவர்கள்” என்னும் பொருள்பட பயன்படுத்தப்படுகின்றது. தமிழ்நாட்டின் பச்சைமலையில் வாழும் மலையாளிப் பழங்குடி மக்களின் சமூக அமைப்பு மற்றும் சட்டத் திட்டங்களை விரிவாக ஆராய்கிறது. பச்சைமலை, கோம்பை நாடு, வண்ணாடு, தென்புற நாடு, ஆத்தி நாடு என நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் பல கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இம்மக்களிடையே தங்கள் முன்னோர்களின் வம்சத்தைக் குறிக்கும் 'குலம்' அல்லது 'வீடு' என்ற தனித்துவமான முறை பின்பற்றப்படுகிறது. ஒரே குலத்திற்குள் திருமண உறவுகள் இல்லை. 'கவுண்டன் குலம்' மற்றும் 'குடியானவன் குலம்' என இருபெரும் குலங்கள் உள்ள நிலையில், கவுண்டன் குலமே உயரியதாகக் கருதப்படுகிறது சமூக அமைப்பில், கிராம அளவில் ஊர்க் கவுண்டன், ஊர் மூப்பன், கங்காணி போன்றோரும், நாட்டு அளவில் நாட்டுக் கவுண்டன் (மந்திரி), மூப்பன், நாட்டு சீவன் (சேவபாடி) போன்றோரும் தலைமைப் பொறுப்புகளை வகிக்கின்றனர். இவர்களது பஞ்சாயத்து முறைகள் கிராம அளவிலும், நாட்டுக் கூட்டங்கள் மூலமாகவும் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கின்றன. குறிப்பாக, விவாகரத்து மற்றும் தகாத உறவுகள் போன்ற பிரச்சனைகளே பஞ்சாயத்துகளில் அதிகம் கையாளப்படுகின்றன. பாரம்பரிய வழிகாட்டுதல்கள் மற்றும் தற்காலச் சூழலுக்கேற்ப வகுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. பெண்களின் தலைமைப் பொறுப்பு வரையறுக்கப்பட்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நவீன நீதிமன்றச் சிக்கல்களால், மரபுவழிப் பஞ்சாயத்துகள் இன்றும் மக்களிடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. எட்ஜர் தர்ட்சன் மற்றும் ரங்காச்சாரி ஆகியோர் இவர்களைப் பற்றி கீழ்க்காணுமாறு கூறுகின்றார். “மலையாளி பழங்குடி, நீலகிரியில் வாழும் தோடர் பழங்குடிகள் போல் ஆதிகாலம் தொட்டு மலையில் வாழும் பழங்குடிகள் அல்ல. இவர்களது மொழி தமிழ். இவர்கள் தமிழ்நாட்டின் சமபகுதியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற பழங்குடிகள் ஆகும்” என்கின்றனர். இக்கட்டுரையானது பச்சைமலை மலையாளியின பழங்குடி மக்களின் சமூக அமைப்புகளையும் அவர்களின் சட்டத் திட்டங்களையும் ஆராய்வதாக அமைகின்றது.

The tribal group known as "Malayali" lives in three hill regions of Tamil Nadu. They have no connection with the Malayalam-speaking people of Kerala. They live in isolation in the hill areas of Pachamalai, Kollimalai, and Kalvarayanmalai in Tamil Nadu. The term “Malayali” is used to mean “those who live in the hills” or “those who rule the hills.” This article extensively explores the social structure and legal systems of the Malayali tribal people living in the Pachamalai hills of Tamil Nadu. Pachamalai is divided into four major regions: Kombai Nadu, Vannadu, Thenpura Nadu, and Aathi Nadu, and each region consists of several villages. Among these people, a unique system called 'kulam' or 'veedu', which indicates their ancestral lineage, is followed. There are no marriage relationships within the same clan. With two major clans, 'Goundan Kulam' and 'Kudiyanavan Kulam', Goundan Kulam is considered superior. In their social structure, at the village level, positions such as Oork Goundan, Oor Moopan, and Kangani exist, while at the regional level, titles like Nattuk Goundan (Minister), Moopan, and Nattu Sevan (Servant) hold leadership responsibilities. Their panchayat systems operate at the village level and also through regional gatherings to resolve social issues. Notably, issues like divorce and illicit relationships are most commonly addressed in these panchayats. Judgments are delivered based on traditional guidance and certain restrictions set in accordance with contemporary circumstances. It is noteworthy that women’s leadership responsibilities are limited. Due to the complexities of the modern judicial system, traditional panchayats still hold great importance among the people. Edgar Thurston and Rangachari state the following about them: "The Malayali tribes are not ancient hill tribes like the Todas who live in the Nilgiris. Their language is Tamil. They are tribal groups who migrated from the plains of Tamil Nadu." This article aims to explore the social structures and legal systems of the Malayali tribal community of Pachamalai.

Keywords

பழங்குடிகள், சமூகம், சட்டதிட்டம், குலம், அதிகார அமைப்பு

How to Cite this Article?

அன்பழகன், ரெ., மற்றும் திவ்யநாதன், ச. (2024). பச்சைமலை மலையாளியின பழங்குடி மக்களின் சமூக அமைப்பு மற்றும் சட்டத் திட்டங்கள். பொன்னி நதி, 2(1), 10-16.

References

1. அண்ணாதுரை.கே., (1980) “கல்ராயன் மலையாளி மொழியின் விளக்க ஆய்வு", அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் (வெளியிடப்படாத பிஎச்.டி ஆய்வறிக்கை)
2. சி. மகேஸ்வரன்., (2007) “பச்சைமலை மலையாளி பழங்குடியினரின் இனவரைவு”.
3. சி. பிரேம் நசீர்., (2015) "தமிழ்நாட்டில் மலையாள பழங்குடியினரின் திருமண முறை: பச்சைமலை மலைகள் பற்றிய சிறப்பு குறிப்புடன்"
5. எட்கர் தர்ஸ்டன் & ரங்காச்சாரி., (1909) "தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்", அரசு அச்சகம்.
6. கருணாகரன்.கே., (1975) "கொல்லிமலை பேச்சுவழக்கு ஒரு விளக்க ஆய்வு", அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
7. முத்துகிருஷ்ணன்.டி., (1989) "பச்சைமலை மலையாளி பேச்சு பற்றிய விளக்க ஆய்வு", அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் (வெளியிடப்படாத Ph.D ஆய்வறிக்கை)
8. நபா குமார்., (2007) "பழங்குடி இந்தியாவில் இரட்டைக் கல்வி" (மேற்கு வங்கத்தின் ஒரு ஆய்வு, மிட்டல் வெளியீடு, புது தில்லி.

1. Annadurai.K., (1980) “A Descriptive study of kalrayan Malayali Dialect”, Annamalai University, Annamalai Nagar (Un published Ph.D thesis)
2. C. Maheswaran., (2007) "Ethnography of the Pachaimalai Malaiyali tribes"
3. C. Prem Naseer., (2015) "Marriage System of Malayali Tribes in Tamilnadu: With Special Reference to Pachaimalai Hills"
5. Edgar Thurston & Rangachari., (1909) “Caste and tribes of South India”, Government press.
6. Karunakaran.K., (1975) “A Descriptive study of Kollimalai Dialect”, Annamalai University, Annamalai Nagar.
7. Muthukrishnan.T., (1989) “A Descriptive study of Pachaimalai Malayali Speech”, Annamalai University, Annamalai Nagar (Un published Ph.D thesis)
8. Naba Kumar., (2007) “Duary Education in Tribal India” (A Study of Western Bengal, Mittal Publication, New Delhi.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.