உலகில் வகுக்கப்பட்டுள்ள சமயங்களுள் முதலானதாகவும் மேன்மையானதாகவும் விளங்குவது சைவ சமயமாகும். இச்சமயத்திற்கு முழுமுதற் கடவுளாக விளங்குபவன் சிவபெருமான். வேதமும் சைவமும் தழைத்து ஓங்கி வளர்வதற்காக திருஞானசம்பந்தப் பெருமான் சீகாழிப் பதியில் அவதரித்தார். தமிழகத்தில் பிற சமயங்களின் ஆதிக்கச் சூழல் அதிகரித்திருந்த நிலையில் திருநெறிய தமிழும் சைவமும் வளரத் திருஞானசம்பந்தர் பல திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டார். நாளும் இன்னிசையாலும் செந்தமிழாலும் பல பதிகங்களை இயற்றினார். திருஞானசம்பந்தரது காலத்தில் பிற சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் நன்கு வேரூன்றியிருந்தன. சமண மற்றும் பௌதத்தின் சமயக் கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளாகினர் என்பது வரலாறு. சைவ சமயக் கொள்கையையும், பரம்பொருளான சிவபெருமானின் வழிபாட்டு நெறியையும் திருத்தலங்கள் தோறும் சென்று நாடெங்கும்பாடி சைவ சமயத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு ஆற்றியவர். திருஞானசம்பந்தரது முதல் மூன்று திருமுறைகளில் காணப்படும் சமணர்களின் நிலை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணமுடிகின்றது. திருஞானசம்பந்தர் சைவச் சமயத்தைப் பரப்பியது பெரும்புரட்சியாகும். அதற்கான கட்டாயச்சூழலும் அதன் தேவையும் திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. திருஞானசம்பந்தரின் பதிகங்கள் வாயிலாக சமணர்களின் நிலை குறித்து ஆராய்ந்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். 'திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சமணர்களின் நிலை’ என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் முன்னுரை, சைவ சமயம், சமணர்கள், திருஞானசம்பந்தரது 10வது பாடல், முக்திபேறு ஆகிய துணைத்தலைப்புகளின் கீழ் ஆராயப்பட்டுள்ளது. கட்டுரையின் நிறைவாக முடிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Saivism is one of the oldest and most prominent religions in the world, with Lord Shiva being the supreme deity of this faith. Thirugnanasambandha Peruman incarnated in Sirkazhi Pathi to ensure the flourishing and growth of the Vedas and Saivism. During a time when other religions were gaining prominence in Tamil Nadu, Thirugnanasambandha undertook numerous pilgrimages to promote the development of Saivism. He composed many hymns in Tamil to further this cause. At the time of Thirugnanasambandha, religions such as Jainism and Buddhism were well-established in Tamil Nadu. History indicates that the religious principles of Jainism and Buddhism caused suffering among the people. Thirugnanasambandha played an important role in the development of Saivism by traveling to various pilgrimage sites and singing hymns that promoted the principles of Saivism and the worship of Lord Shiva, the Supreme Being, across the country. Various studies are being conducted on the portrayal of Jainism in the first three Tirumurais of Thirugnanasambandar's hymns. Thirugnanasambandar's efforts in propagating Saivism represented a significant religious revolution, as the conditions and needs for such a movement existed during his time. The aim of this article is to study, the Status of the Jains through the writings of Thirugnanasambandar. This article, titled “Portrayal of Jains in Thirugnanasambandhar Thevaram” is divided into sections: Introduction, Saivism, Jainism, Thirugnanasambandar's 10th Verse, and Muktiperu, with a conclusion at the end.