தமிழர் பண்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் செந்தமிழ் இலக்கியங்களுள் சிலப்பதிகாரம் தனிச் சிறப்புடையது. சங்கமருவிய காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் இந்நூலைச் சமண சமயத் துறவியான இளங்கோவடிகள் இயற்றியுள்ளார். தமிழின் முதற் காப்பியமாகவும், முத்தமிழ்க்காப்பியமாகவும் கருதப்படும் இவ்விலக்கியம், தமிழ் மக்களின் வாழ்வியல் முறைகளையும், கலை மேம்பாட்டினையும், வழிபாட்டு நெறிகளையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த சமய, சமுதாய இலக்கியமாகவும் அமைகின்றது. இத்தமிழ்ப் பண்பாட்டு இலக்கியத்தில் சமண சமயக் கருத்துக்கள் மட்டுமன்றி இந்துசமய நெறிகள் பற்றிய அரிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. சமய சமரசத்துடனும் சமயப் பொதுநோக்குடனும் விளங்கும் இத்தமிழ்க் காப்பியத்தில் இடம்பெறும் சிவநெறியாகிய சைவநெறி தொடர்பான விடயங்களை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
Among the corpus of classical Tamil literature that articulates the cultural ideologies of the Tamil people, Silappadikaram occupies a position of singular distinction. This literary work, considered to have emerged during the Sangam influenced era, was authored by Ilango Adigal, an ascetic associated with Jainism. Recognized as the earliest Tamil epic and as a comprehensive embodiment of “Muththamizh” (encompassing prose, music, and drama), this work serves as a distinguished religious and sociocultural text that illuminates the lived practices, artistic developments, and ritual traditions of the Tamil people. This Tamil cultural literary work includes not only Jain religious ideas but also rare references to Hindu ritual practices. This article aims to study aspects related to Saiva philosophy, which is prominently featured in this Tamil epic that reflects both religious harmony and a universal religious outlook.